மதுரை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 87.
வடிவேலுவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
"ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலுவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சர் அன்பில் மகேஷ், சசிகலா உள்ளிட்டோரும் வடிவேலுவை தொலைபேசி வழி தொடர்புகொண்டு ஆறுதல் கூறினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஆறுதல் தெரிவித்துள்ளார்.

