சென்னை: சசிகலா அதிமுக தலைமையைச் சந்திக்க உள்ளதாகக் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "எம்ஜிஆர், ஜெய லலிதா போன்று இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நான்கறை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். சசிகலா அ.தி.மு.க. தலைமை யைச் சந்திக்க உள்ளதாகக் கூறுவது பெரும் கேலிக்கூத்தாக உள்ளது. நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அத்துடன், தலைமைக் கழகத்தைச் சூறையாடிவர்களை மீண்டும் இந்தக் கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கு கட்சித் தொண்டர்கள் விரும்பமாட்டார்கள் என்பது என் கருத்து," என அவர் தெரிவித்துள்ளார்.

