சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான சிவகுமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவை அடுத்து இந்தத் தொகுதி காலியானதால், அடுத்த மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவ தாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், நடத்தை விதிகள் உடடினயாக அமலுக்கு வந்துள்ளன.

