தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் காலமானார்

2 mins read
05d46b2c-9517-4a53-b2d9-f26934015269
-

சென்னை: புகழ்­பெற்ற பர­த­நாட்­டிய கலை­ஞர் லட்­சுமி விஸ்­வ­நா­தன், 78, சென்­னை­யில் சென்ற வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.

நட­னக் குரு, எழுத்­தா­ளர், ஆய்­வா­ளர் என பன்­மு­கத் திறன் கொண்ட இவர், வயது முதிர்வு மற்­றும் உடல்­ந­லக் குறை­வால் சிகிச்சை பெற்று வந்­தார்.

இந்த நிலை­யில் சென்னை அடை­யா­றில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் காலை மூச்சு விடு­வ­தற்­குச் சிர­ம­மாக இருப்­ப­தாக அவ­ரது சகோ­த­ரி­யும் கர்­நா­டக இசைப் பாட­க­ரு­மான சாரு­மதி ராமச்­சந்­தி­ர­னி­டம் தெரி­வித்­துள்­ளார். சிறிது நேரத்­தில் அவர் உயிர் பிரிந்­தது.

பிர­பல திரைப்­பட இயக்­கு­நர் கே.சுப்­ர­ம­ணி­யத்­தின் சகோ­த­ரர் கே.விஸ்­வ­நா­தன் - அல­மேலு தம்­ப­தி­ய­ருக்கு 1944ஆம் ஆண்டு ஜன­வரி 27ஆம் தேதி லட்­சுமி விஸ்­வ­நா­தன் பிறந்­தார்.

இவ­ரது 7வது வய­தில் மயி­லாப்­பூ­ரில் உள்ள ரசிக ரஞ்­சனி சபா­வில் அரங்­கேற்­றம் நடை­பெற்­றது.

இவர், சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆங்­கில இலக்­கி­யத்­தில் தங்­கப்­ப­தக்­கம் பெற்­றுள்­ளார். பிர­பல கர்­நா­டக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி பற்றியும் பரதநாட்­டி­யம் உள்­ளிட்­டவை தொடர்­பாக நான்கு நூல்­களை எழு­தி­யுள்­ளார்.

தமி­ழக அரசு வழங்­கிய கலை­மா­மணி விருது, இந்­திய அதிபரால் வழங்­கப்­பட்ட தேசிய சங்­கீத நாடக அகா­டமி விருது, கிருஷ்ண கான சபா வழங்­கிய நிருத்ய சாரு­மதி விருது, சென்னை மியூ­சிக் அகா­டமி வழங்­கிய நிருத்ய கலா­நிதி விருது உள்­ளிட்ட பல்­வேறு விரு­து­களை அவர் பெற்­றுள்­ளார்.

அவ­ரது மறைவு குறித்து கருத்து தெரி­வித்த சென்னை மியூ­சிக் அகா­டமி தலை­வர் என். முரளி, "லட்­சுமி விஸ்­வ­நா­த­னின் நட­னம் மிக­வும் ஆழ­மான மற்­றும் நுட்­ப­மா­ன­தாக அழ­கி­யல் நிறைந்த அறி­வார்ந்த அணுகு முறையை கொண்­டி­ருந்­தது," என்­றார்.

பர­த­நாட்­டிய குரு பத்மா சுப்­ர­ம­ணி­யம், ''லட்­சுமி விஸ்வ நாதன் மறைவுசெய்­தியை என்­னால் ஜீர­ணிக்க முடியவில்லை. மன­வ­லியை ஏற்படுத்­தி­யது. இது எனக்கு மட்டுமல்­லாது பர­த­நாட்­டிய உல­கத்­துக்கே பேரிழப்பா­கும்,'' என்­றார்.