தமிழ்நாடு முழுவதும் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

2 mins read
24403789-9f58-4165-a07b-90c0bf549989
-

சென்னை: அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­துக்கு எதி­ராக ஆளு­நர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்­பட்டு வரு­வ­தாக குற்­றம்சாட்­டிய தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர், அவ­ருக்கு எதி­ராக 234 தொகு­தி­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் அக்­கட்­சி­யைச் சேர்ந்த எம்­எல்­ஏக்­கள், எம்­பிக்­கள், மாவட்டத் தலை­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

சென்­னை­யில் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அருகே தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி தலை­மை­யில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது பேசிய அவர், "இது ரவி என்ற தனி மனி­த­னுக்கு எதி­ரான போராட்­டம் அல்ல. அவர் மையப்­ப­டுத்­தும் ஆர்­எஸ்­எஸ், பாஜக, சனா­தன தர்­மம் என்ற பழ­மை­வா­தம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான போராட்­டம்," என்­றார்.

"காந்­தியைப் போன்ற ராம பக்தர் யாரும் இருக்க முடி­யாது. இன்று ராமர் இருந்­தி­ருந்­தால் காந்­திக்­கு­தான் வாக்­க­ளித்­தி­ருப்­பார். பாஜ­க­வுக்கு வாக்­க­ளித்­தி­ருக்க மாட்­டார். காந்தி கட­வுள், மத நம்­பிக்கை உடை­ய­வர். தீண்­டாமை, உடன்­கட்டை ஏறு­வதை அவர் எதிர்த்­தார். ஆதீ­னங்­களோ, சங்­க­ராச்­சா­ரி­யாரோ தீண்­டா­மையை எதிர்க்­க­வில்லை," என்று கே.எஸ். அழ­கிரி குறிப்­பிட்­டார்.

"காங்­கி­ரஸ் கட்சி எந்த மதத்­துக்­கும் ஆத­ர­வா­னது இல்லை. எதி­ரா­ன­வர்­களும் இல்லை. எங்­க­ளுக்­கும் மத உணர்வு உண்டு. ஆனால் மத­வெறி இல்லை. ஆளுநர் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு எதி­ராக செயல்­பட்டு வரு­கி­றார். அவர், இந்­திய அர­சின் பிர­தி­நிதி. ஆர்­எஸ்­எஸ், பாஜக பிர­தி­நி­தி­போல ஆளு­நர் பேசக்­கூ­டாது. பாஜக, ஆர்­எஸ்­எஸ் சொல்­லித் தரு­வதை அப்­ப­டியே செயல்­ப­டுத்­தும் மாண­வ­ராக ஆளு­நர் உள்­ளார்," என்­றும் அவர் கூறி­னார். ஆர்ப்­பாட்­டத்­தில் கட்­சி­யின் மாநில துணைத் தலை­வர்­கள் பொன்.கிருஷ்­ண­மூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பல­ரா­மன், மாவட்டத் தலை­வர்­கள் சிவ.ராஜ­சே­க­ரன், எம்.எஸ்.திர­வி­யம், டில்­லி­பாபு, எஸ்சி அணித் தலை­வர் ரஞ்­சன்­கு­மார் உட்­பட பலர் கலந்து­கொண்­ட­னர்.