சென்னை: மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம் பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அத்துடன், ஒன்பது திருக் கோயில்களில் கண்டறிப் பட்டுள்ள சுமார் 61,600 சுருணை ஓலைகள், பத்து செப்புப் பட்டயங்கள் மற்றும் இருபது பிற ஓலைச் சுவடிகளையும் பராமரித்துப் பாதுகாத்து, மின்னிலக்கமய மாக்கி, நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

