பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் குடமுழுக்கு தமிழில் ஆகம விதிப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இம்மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருப் பணிகள் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், குடமுழுக்கு வேள்வி நடைபெறும் இடத்தில் 90 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்றார்.
கடந்த இரண்டு நாட்களாக 47,000 பக்தர்கள் இணையம் வழியாக பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இவர்களில் 2,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவிருக் கின்றனர்.
இதற்கிடையே பக்தர்கள் மட்டு மின்றி முக்கிய பிரமுகர்கள், நீதி யரசர்கள் ஆகியோருக்கு தேவை யான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக மருத்துவமனை, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.