இன்று தை அமாவாசை. அதனையொட்டி தங்கள் மறைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள் அருகே உள்ள கடற்கரைகளில் மக்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
கன்னியாகுமரியிலும் மக்கள் திரளாக கூடியிருந்தனர். கடலில் முதலில் புனித நீராடி அதன் பின்னர் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் வழங்கினர். தர்ப்பணத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை கடலில் போட்டுவிட்டு அருகே உள்ள கோவில்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றுள்ளனர். பல்லாயிரம் பக்தர்கள் வருகை புரிவதால், இன்று முழுவதும் கோயில் திறந்து வைத்திருக்கப்பட்டிருக்கும்.

