மாமல்லபுரத்துக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்க ஏற்பாடு

மாமல்லபுரத்துக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்க ஏற்பாடு

1 mins read
06f550ba-2a1a-439b-aab0-f4fe0470013d
படம்: இந்திய ஊடகம் -

'ஜி20' மாநாட்டையொட்டி வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் மாமல்லபுரத்துக்கு வருகின்றனர். அவர்களை முறைப்படி வரவேற்று சிறப்பிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது.

உலகத் தலைவர்கள் பங்கேற்கும் 'ஜி20' மாநாட்டுக்கு இம்முறை இந்தியா தலைமையேற் கிறது. இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலை நகரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இம்மாதம் 31ஆம் தேதி, அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ஆம் தேதி, 2ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐடிசி சோழா ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

ஜி20 மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா , பிரேசில், கனடா உட்பட இருபது நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிடயுள்ளனர். அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .