இடைத்தேர்தல் தேவை இல்லாத வேலை: பாமக

இடைத்தேர்தல் தேவை இல்லாத வேலை: பாமக

2 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்குச் சட்ட மன்ற இடைத்­தேர்­த­லில் போட்டி யிட பாமக மறுத்­து­விட்­டது. அது மட்­டு­மல்­லா­மல் எந்­தக் கட்­சிக்­கும் ஆத­ர­வில்லை என்று அது அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு உள்­ளார்.

அதில், "தமிழ்­நாட்­டில் ஈரோடு கிழக்கு சட்­டப்­பே­ர­வைத் தொகு­திக்கு பிப்­ர­வரி மாதம் 27ஆம் தேதி இடைத் தேர்­தல் நடத்­தப்­படும் என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தி­ருக்­கும் நிலை­யில், அது குறித்து பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் உயர்­நி­லைக்­குழு கட்­சி­யின் நிறு­வ­னர் மருத்­து­வர் அய்யா அவர்­கள் தலை­மை­யில் கூடி விவா­தித்­தது.

"கட்­சி­யின் தலை­வர் மருத்­து­வர் அன்­பு­மணி இரா­ம­தாஸ் உள்­ளிட்ட உயர் நிலைக்­குழு உறுப்­பி­னர்­கள் இக்­கூட்­டத்­தில் பங்­கேற்­ற­னர்.

'இடைத்­தேர்­தல்­கள் தேவை யற்­றவை; மக்­க­ளின் வரிப் பணத்­தை­யும் நேரத்­தை­யும் வீண­டிப்­பவை.

"அத­னால்­தான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கால­மா­ன­தாலோ, கட்­சித் தாவி­ய­தாலோ சட்­டப் பேரவை உறுப்­பி­னர் பதவி காலி­யா­னால் அங்கு இடைத்­தேர்­தல் நடத்­தத் தேவை­யில்லை;

"அங்கு பொதுத்­தேர்­த­லில் எந்­தக் கட்சி வெற்றி பெற்­றதோ அதே கட்­சி­யைச் சேர்ந்த ஒரு­வரை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக்கிவி­ட­லாம்'' என்­பதுதான் பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் நிலைப்­பாடு.

"இதையே பாட்­டாளி மக்­கள் கட்சி தொடர்ந்து கடை­பி­டித்து வரு­கிறது. அதன்­ப­டியே ஈரோடு கிழக்குச் சட்­டப்­பே­ர­வைத் தொகுதி இடைத்­தேர்­த­லி­லும் போட்­டி­யி­டு­வ­தில்லை;

"எந்­தக் கட்­சிக்­கும் ஆத­ரவு அளிப்­ப­தில்லை என்று உயர் நிலைக்­குழு கூட்­டத்­தில் ஒரு மன­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பாமக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் உள்ளன. மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை.