ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் ராமேசு வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்தனர்.
இந்திய புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ராமேசு வரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சாமியைத் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட நேற்று முன்தினம் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு பின்னர் கடற்கரையில் அமர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பண பூசை செய்து வழிபட்டனர். கங்கை ஆற்றிலும் மக்கள் நீராடி, முன்னோர்களுக்குப் பூசை செய்தனர்.

