மின்கட்டணம் மாறாது

மின்கட்டணம் மாறாது

2 mins read

மாதந்­தோ­றும் மின் கட்­ட­ணம் மாற்­றி

அ­மைக்­கும் முறையை தமி­ழக அரசு ஏற்­காது என்று அமைச்­சர் செந்­தில் பாலாஜி உறு­தி­யு­டன் கூறி­யுள்­ளார்.

சென்னை: சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் தி.மு.க. விளை­யாட்டு அணி­யின் நேர்­கா­ணல் நிகழ்ச்சி 2வது நாளாக நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இந்த நேர்­கா­ணலை தமிழ்­நாடு விளை­யாட்டு மேம்­பாட்டு அணி­யின் செய­லா­ளர் தயா­நிதி மாறன் எம்.பி. முன்­னி­லை­யில் மின்­சா­ரத்­துறை அமைச்­சர் செந்தில்­ பா­லாஜி தொடங்கி வைத்­தார்.

அப்­போது பேசிய அமைச்­சர் செந்­தில் பாலாஜி, மின்­சா­ரத் துறையை தனி­யா­ரி­டம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான முயற்­சி­களை மத்­திய அரசு எடுத்து வரு­கிறது என்­றார்.

"பெட்­ரோல்-டீசல் விலையைப் போன்று மின்­சாரக் கட்­ட­ணத்­திலும் அடிக்­கடி மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்சி எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

"தனி­யா­ரி­டம் மின்­சார வாரி­யம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டால் தமிழ்­நாட்­டில் கரு­ணா­நிதி கொண்டு வந்த சிறப்பு வாய்ந்த திட்­ட­மான விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம், அதேபோன்று 100 யூனிட் இல­வச மின்­சா­ரம், விசைத் தறி, கைத்­தறி மற்­றும் குடி­சை­க­ளுக்­கான இல­வச மின்­சா­ரம், மானி­யம் இவை­யெல்­லாம் கேள்­விக்­கு­ரி­யாகிவிடும் வகை­யில் மத்­திய அர­சின் மின்­சார திருத்த மசோதா அமைந்­துள்­ளது," என்­று அவர் மேலும் தெரிவித்தார்.

"இந்த மசோ­தாவை தமிழ்­நாடு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஒரு போதும் ஏற்க மாட்­டார். அனு­ம­திக்­க­வும் மாட்­டார்.

"எனவே மாதம் ஒருமுறை மின்­சா­ரக் கட்­ட­ணத்­தில் மாற்­றம் வரும். உய­ரும் என்ற அச்­சத்தை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்த வேண்­டாம். "மாதாந்­திர மின் கட்­ட­ணத்­தில் எந்­த­வித மாற்­ற­மும் இருக்­காது," என்று அவர் கூறினார்.

இதற்­கி­டையே இரண்டு கோடியே ஒரு லட்­சம் பேர் மின் இணைப்பு எண்­ணு­டன் ஆதார் எண்ணை இணைத்­துள்­ள­னர்.

இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது சிறப்பு வாய்ந்த முயற்சி ஆகும். மின்­சார வாரி­யத்தை மேம்­ப­டுத்­த­வும், நவீ­ன­ம­ய­மாக்­கவும் இந்த முயற்சி எடுக்­கப்­ பட்­டு உள்­ளது," என்றார்.