மாமல்லபுரத்துக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களை வரவேற்க ஏற்பாடு

1 mins read
a2e021c3-736e-4864-85e2-564746290bbe
-

சென்னை: 'ஜி20' மாநாட்டை யொட்டி வெளி­நாட்டு பிர­மு­கர்­கள் பலர் மாமல்­ல­பு­ரத்­துக்கு வரு கின்­ற­னர்.

அவர்­களை முறைப்­படி வர­வேற்று சிறப்­பிக்க தமிழ்­நாடு அரசு ஏற்­பா­டு­களைச் செய்து வரு­கிறது.

உல­கத் தலை­வர்­கள் பங்­கேற்­கும் 'ஜி20' மாநாட்­டுக்கு இம்­முறை இந்­தியா தலை­மை­யேற்­கிறது.

இம்­மா­நாட்­டின் நிகழ்ச்­சி­கள் நாடு முழு­வ­தும் உள்ள பல மாநி­லங்­க­ளின் தலை­ந­க­ரங்­க­ளி­லும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த சுற்­றுலா நக­ரங்­களிலும் நடத்த திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதன்­படி இம்ாதம் 31ஆம் தேதி, அடுத்த மாதம் (பிப்­ர­வரி) 1ஆம் தேதி, 2ஆம் தேதி ஆகிய 3 நாட்­கள் சென்னை­யில் உள்ள தாஜ்­கோ­ர­மண்­டல் மற்­றும் கன்­னி­மாரா நட்­சத்­திர விடு­தி­கள், கிண்டி ஐடிசி சோழா ஆகிய இடங்­களில் நிகழ்ச்­சி­கள் நடை­பெற இருக்­கின்றன.

ஜி20 மாநாட்­டில் அர்­ஜெண்­டினா, ஆஸ்­தி­ரே­லியா, பிரே­சில், கனடா உட்­பட இரு­பது நாடு களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் மற்­றும் சிறப்பு விருந்­தி­னர்­கள் கலந்து கொள்­கின்­ற­னர்.

மாநாட்­டுக்கு வரும் வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­கள் மாமல்­ல­ பு­ரத்­தில் உள்ள புரா­தன சின்­னங்­களைப் பார்­வை­யி­ட­ உள்­ள­னர்.

அவர்­க­ளுக்கு தமி­ழக பாரம்­ ப­ரிய முறைப்­படி வர­வேற்பு அளிப்­பது மற்­றும் கலை நிகழ்ச்சி களுக்கும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

இதை­யொட்டி மாமல்­ல­பு­ரத்­தில் வர­வேற்பு ஏற்­பா­டு­கள் மற்­றும் பாது­காப்பு குறித்து சுற்­று­லாத்­துறை இயக்­கு­நர் சந்­தீப் நந்­தூரி ஆய்வு செய்­தார். அப்­போது, வெளி­நாட்­டி­னரை வர­வேற்க எந்­தெந்த இடத்­தில் கலை­நி­கழ்ச்சி நடத்­து­வது மற்றும் பாது­காப்பு அளிப்பது குறித்து அவர் ஆராய்ந்து ஆேலாசனைகளை வழங்­கி­னார்.