ஈரோடு இடைத்தேர்தல்; திமுக பிரசாரம் தொடங்கியது

ஈரோடு இடைத்தேர்தல்; திமுக பிரசாரம் தொடங்கியது

2 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்­தேர்­தல் தொடர்­பாக அண்ணா அறி­வா­ல­யத்­தில் திமுக தலை­வ­ரும் முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டா­லி­னு­டன், தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர்­கள் கே.எஸ்.அழ­கிரி, ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன் உள்­ளிட்­டோர் ஆலோ­சனை மேற்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து வீடு வீடாகச் சென்று, வாக்­கா­ளர்­க­ளி­டம் வாக்­குச் சேக­ரிக்­கும் பணி தமி­ழக வீட்டு வச­தித்­துறை அமைச்­சர் முத்­து­சாமி தலை­மை­யில் தொடங்­கப்­பட்­டது.

தற்­போது வாக்கு சேக­ரிக்­கும் இந்­தப் பணி ஈரோடு பெரி­யார் நக­ரில் இருந்து தொடங்கி தொகுதி முழு­வ­தும் நடை­பெற உள்­ளது.

இதில் திமு­க­வின் முக்­கிய தலை­வர்­களும் அமைச்­சர்­களும் பங்­கேற்று வாக்­குச் சேக­ரிக்­கும் பணி­யில் மிக விரை­வில் ஈடு­ப­ட­வுள்­ள­னர்.

இதற்­கி­டையே ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யில் யாரை நிறுத்­து­வது என்­பது குறித்து அதி­முக தலைமை தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கிறது.

வரும் பிப்­ர­வரி மாதம் 27ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடை­பெற உள்­ளது. தி.மு.க. கூட்­ட­ணி­யில் உள்ள காங்­கி­ர­சுக்கு மீண்­டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போல் அ.தி.மு.க கூட்­ட­ணி­யில் உள்ள த.மா.கா.வுக்கு கடந்த தேர்­த­லில் வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது. ஆனால் இம்­முறை அ.தி.மு.க. இங்கு போட்­டி­யி­டு­கிறது.

இத­னால் அ.தி.மு.க. தொண்­டர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

அ.தி.மு.க. சார்­பில் யார் போட்­டி­யி­டு­வார் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

ஈரோடு மாந­கர் மாவட்ட செய­லா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான கே.வி.ராம­லிங்­கம் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக உள்­ள­தாகக் கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அதே சம­யத்­தில் அந்தத் தொகு­தி­யில் புகழ்­பெற்ற முன்­னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்­ன­ரசு என்­ப­வ­ரும் போட்­டி­யிட விருப்­பம் தெரி­வித்து உள்­ளார்.

இத­னால் அ.தி.­மு.க தரப்­பில் போட்­டி­யி­டு­வது கே.வி. ராம­லிங் கமா, தென்­ன­ரசா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முன்­னாள் அமைச்­சர் டி.ஜெயக்­கு­மார், இரட்டை இலை சின்­னம் நிச்­ச­யம் எங்­க­ளுக்கே கிடைக்­கும்," என்று கூறி­னார்.

"அ.தி.மு.க. இடைக்­கால பொதுச் செய­லா­ள­ராக முறைப்­படி பொதுக்­கு­ழு­வில் தேர்வு செய்­யப்­பட்ட விவ­ரத்தை தேர்­தல் ஆணை­யத்­தில் சமர்ப்­பித்து விட்­டோம். தேர்­தல் ஆணை­ய­மும் அதை ஏற்­றுக்­கொண்­டு­விட்­டது," என்றும் மேலும் தெரி­வித்­தார்.