ஓபிஎஸ் வட்டாரத்தில் நுழைந்த பழனிசாமி

ஓபிஎஸ் வட்டாரத்தில் நுழைந்த பழனிசாமி

1 mins read

சென்னை: ஓபி­எஸ்­ஸின் சொந்த மாவட்­ட­மான தேனி­யில் தொண்­ட­ரின் இல்­லத் திரு­ம­ணத்­தில் கலந்­து­கொள்ள வந்த முன்­னாள் முதல்­வ­ரும் அ.தி.மு.க. இடைக்­கால பொதுச் செய­லா­ள­ரு­மான பழ­னி­சா­மிக்கு உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

தேனி மாவட்­டம் கம்­பத்­தில் கட்சி நிர்­வா­கி­க­ளான முன்­னாள் எம்.எல்.ஏ. ராம­ராஜ் மற்­றும் கூட­லூர் நகர கழக செய­லா­ளர் அருண்­கு­மார் ஆகி­யோ­ரது இல்­லத் திரு­மண விழாக்­களில் பங்­கேற்­ப­தற்­காக எடப்­பாடி பழனி சாமி கார் மூலம் சேலத்­தி­லி­ருந்து வந்­தார்.

திண்­டுக்­கல், வத்­த­ல­குண்டு வழி­யாக தேனி மாவட்­டத்­துக்­குள் நுழைந்­த­போது அவ­ருக்கு ஆயிரக்­க­ணக்­கான தொண்­டர்­கள் உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர். குறிப்­பாக அவ­ரது கார் கூட்­டத்­தில் இருந்து மேடைக்கு செல்ல நீண்ட நேர­மா­னது.

அ.தி.மு.க.வின் இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ள­ராக பொறுப்­பேற்ற பிறகு எடப்­பாடி பழ­னி­சாமி தேனி மாவட்­டத்­திற்கு வருகை தரு­வது இதுவே முதல் முறை ஆகும். இந்த வர­வேற்பு நிகழ்­ச்சி­யில் முன்­னாள் அமைச்­சர்­கள் செல்­லூர் ராஜு, ஆர்பி உதய குமார், கடம்­பூர் ராஜு உள்­ளிட்ட அ.தி.மு.க. முக்­கிய நிர்­வா­கி­களும் கலந்­து­கொண்டு எடப்­பாடி பழ­னி­சா­மியை வர­வேற்­ற­னர்.

இதை­ய­டுத்து வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் பேசிய எடப்­பாடி பழ­னி­சாமி, புரட்­சித்­த­லை­வர் எம்­ஜி­ஆர், புரட்­சித்­த­லைவி அம்மா ஆகி­யோ­ரின் கனவை நன­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­பட்டு, 'நமது வழி தனி வழி' என்­பதை நிரூ­பித்துக் காட்­டு­வோம் என்­றார்.

இத­னால் அதி­முக தொண்­டர்­கள் உற்­சா­க­ம­டைந்­த­னர். பிறகு அங்­கி­ருந்து கிளம்பி கம்­பத்­தில் நடை­பெற்ற மற்­றொரு கட்சி நிர்­வா­கி­யின் திருமண நிகழ்­வில் பங்­கேற்க அவர் புறப்­பட்­டார்.