கோயில் திருவிழா விபத்து; இறந்தோர் 4ஆக அதிகரிப்பு

கோயில் திருவிழா விபத்து; இறந்தோர் 4ஆக அதிகரிப்பு

fallback

24 Jan 2023 - 5:30 am

1 mins read

அரக்­கோ­ணம்: அரக்­கோ­ணம், ராணிப்­பேட்டை மாவட்­டம் நெமிலி அருகே கீழ­வீதி கிரா­மத்­தில் உள்ள மண்­டி­யம்­மன் கோயில் திரு­வி­ழா­வில் பாரந்­தூக்கி சாய்ந்து, விபத்து நிகழ்ந்­தது. இதில் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 4க்கு அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று நடந்த மயி­லேறு நிகழ்ச்­சி­யின்­போது எதிர்­பா­ராத வித­மாக பாரந்­தூக்கி கவிழ்ந்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தில் முத்து குமார், 39, பூபா­லன், 40, ஜோதி­பாபு, 19 ஆகிய மூவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

எட்­டுக்­கும் மேற்­பட்­டோர் படு­கா­யம் அடைந்­த­னர். காயம் அடைந்­த­வர்­களை புன்னை மருத்­து­வ­ம­னைக்­கும் அரக்­கோ­ணம் அரசு மருத்­து­வ­ம­னைக்­கும் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

சில­ருக்கு அரக்­கோ­ணம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்டு, மேல் சிகிச்­சைக்­காக திரு­வள்­ளூர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

இந்த நிலை­யில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பேரப்­பேரி கிரா­மத்­தைச் சேர்ந்த சின்­ன­சாமி என்­ப­வர் சிகிச்சை பல­னின்றி நேற்று காலை உயி­ரி­ழந்­துள்­ளார்.

இதன் மூலம் கோவில் திரு­வி­ழா­வில் நிகழ்ந்த விபத்­தில் பலி எண்­ணிக்கை 4ஆக அதி­க­ரித்­துள்­ளது. நெமிலி காவல்­து­றை­யி­னர் விபத்து குறித்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.