தமிழ்நாடு என்று குறிப்பிடும் ஆளுநர் அழைப்பிதழ் வெளியீடு

தமிழ்நாடு என்று குறிப்பிடும் ஆளுநர் அழைப்பிதழ் வெளியீடு

2 mins read
a439d4f8-fd6e-4eeb-8a5d-91ed7d65ded0
-

சென்னை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவிக்­கும் தமி­ழக அர­சுக்­கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்­சம் பெற்று வந்­தது.

சில நாட்­க­ளுக்கு முன்பு காசி தமிழ் சங்­கம் ஏற்­பாடு செய்த நிர்­வாகிகளுக்கான பாராட்டு விழா­வில் பேசிய ஆளு­நர் ஆர்.என்.ரவி, தமிழ்­நாடு என்ற பெய­ருக்­குப் பதில் தமி­ழ­கம் என்­பதே சரி­யாக இருக்­கும் என்று கூறி­னார்.

ஆங்­கி­லே­யர்­கள் காலத்­தில்­தான் மாநி­லங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன என்­ப­தால் பார­தத்­தின் பகுதி தமி­ழ­கம் என்­ப­து­தான் சரி என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். இதை­ய­டுத்து தமி­ழ­கமா, தமிழ்­நாடா என்ற புதிய சர்ச்சை கிளம்பியது.

ஆளு­ந­ரின் பேச்­சுக்கு பல்­வேறு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்து இருந்­த­னர்.

அண்­மை­யில் தமி­ழக சட்­ட­ ச­பை­யில் உரை­யாற்­றிய ஆளு­நர், தமிழ்­நாடு, அமை­திப்­பூங்கா, சமூக ­நீதி, சுய­ம­ரி­யாதை, பெரி­யார், அண்­ணல் அம்­பேத்­கர், பெருந் ­த­லை­வர் காம­ரா­சர், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலைஞர், திரா­விட மாடல் ஆட்சி ஆகிய வார்த்­தை­களை வாசிக்க மறுத்து அடுத்த பக்­கங்­க­ளுக்கு சென்­றார்.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த முதல்­வர் மு.க. ஸ்டா­லின், ஆளு­நர் உரைக்கு எதி­ராக தீர்­மா­னம் கொண்டு வந்­தார்.

இத­னால் அதிர்ச்சி அடைந்த ஆளு­நர் சட்­ட­சபை கூட்­டத்­தி­லி­ருந்து அவ­சர அவ­ச­ர­மாக வெளி­யே­றி­னார்.

ஆளு­நர் ஆர்.என்.ரவி­யின் பொங்­கல் அழைப்­பி­த­ழில் தமிழக ஆளு­நர் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அது மட்­டு­மல்­லா­மல் தமிழ்­நாடு அரசு முத்­தி­ரை­க்குப் பதிலாக மத்­திய அர­சின் முத்­திரை இடம்­பெற்று இருந்­தது.

இதற்­கி­டையே தமிழ்­நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்­சர் ரகு­பதி உள்­ளிட்ட திமு­க­வி­னர் அதிபர் திரௌ­பதி மர்­மு­வைச் சந்­தித்து ஆளு­ந­ருக்கு எதி­ராக புகார் அளித்­த­னர்.

இத­னை­ய­டுத்து, டெல்லி சென்று திரும்­பிய ஆளு­நர் ஆர்.என்.ரவி, தமிழ்­நாடு பெயர் சர்ச்­சைக்கு விளக்­க­ம­ளித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் வரும் 26ஆம் தேதி நடை­பெற இருக்­கும் குடி­ய­ரசு தின விழா­விற்கு தமிழ்­நாடு ஆளு­நர் மாளி­கை­யின் அதி­கா­ர­பூர்­வ வர­வேற்பு அழைப்­பி­தழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்­நாடு அரசு முத்­தி­ரை­யு­டன் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.