தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இதுவரை ரூ.3,943 கோடி கோயில் சொத்துகள் மீட்பு

1 mins read

சென்னை: தமிழ்­நாடு முழு­ வதும் இந்து சமய அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள கோயில்களுக்கு சொந்­த­மான ரூ.3,943 கோடி மதிப்­பி­லான சொத்­து­கள் இது­வ­ரை­யில் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அது மட்­டு­மில்­லா­மல் கோயில்­க­ளுக்­குச் சொந்­த­மான சொத்­து­களை அள­வீடு செய்­தி­டும் பணி­கள் முழு வீச்­சில் மேற்­கொள்­ளப்­பட்டு இதுவரை­ஒரு லட்­சம் ஏக்­கர் நிலங்­கள் அள­வீடு செய்­யப்­பட்டு, எல்­லைக் கற்­கள் நடப்­பட்டு வேலி­கள் அமைத்து பாது­காக்­கப்­பட்­டுள்­ளன.

இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு இதனை தெரி­வித்­தார்.

ராணிப்­பேட்டை மாவட்­டம், தக்­கோ­லம் மங்­கள லட்­சுமி சமேத அழ­கு­ரா­ஜப் பெரு­மாள் கோயி­லில் நேற்று கைத்­தறி மற்­றும் துணி­நூல்­துறை அமைச்­சர் ஆர்.காந்தி மற்­றும் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு ஆகி­யோர் ரூ.7 கோடி மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­பட உள்ள புன­ர­மைப்பு திருப்­ப­ணி­களைத் தொடங்கி வைத்­த­னர்.

பின்­னர் அமைச்­சர் சேகர்­பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"1,100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சோழர்­க­ளால் கட்­டப்­பட்ட மங்­க­ள­லட்­சுமி சமேத அழ­கு­ ரா­ஜப் பெரு­மாள் கோயிலை தொன்மை மாறா­மல் புன­ர­மைக்­கும் பணி தொடங்­கப்­பட்­டுள்­ளது," என்று திரு சேகர்­பாபு மேலும் தெரி­வித்­தார்.