செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஆ. ராசாவுக்கு கண்டனம்

சென்னை: காம­ரா­ஜர் பற்றி பேசு­வ­தற்கு இன்­றைய தி.மு.க. நிர்­வா­கி­கள் யாருக்­கும் தகு­தியோ அரு­கதையோ இல்லை. பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் பற்றி பொய்­யான கருத்­து­களை பரப்­பி­வ­ரும் ஆ. ராசா பகிரங்க­மாக மன்­னிப்புக் கேட்க வேண்­டும் என்று என்.ஆர். தன­பா­லன் தலை­மை­யில் கூடிய நாடார் சங்­கங்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. ஆ ராசா பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கேட்­கா­விட்­டால் அவ­ரது வீட்டை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­து­வோம் என்­றும் அச்­சங்­கங்­கள் எச்­ச­ரித்­துள்­ளன.

தேமுதிக தனித்துப் போட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்­தேர்­த­லில் தேமு­திக தனித்துப் போட்­டி­யி­டப்போ­வ­தாக பிரே­ம­லதா விஜ­ய­காந்த் நேற்று அறி­வித்­தார். ஈரோடு கிழக்­குத் தொகு­திக்கு வரும் பிப்­ர­வரி 27ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடை­பெறு­கிறது. திமுக கூட்­டணி சார்­பில் மீண்­டும் காங்­கி­ரஸ் கட்சி இதில் போட்­டி­யி­டு­கிறது. அதி­மு­க­வில் ஈபி­எஸ், ஓபி­எஸ் என இரு அணி­களும் போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளன. இத­னால் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்­தல் களம் சூடு­பி­டித்­துள்­ளது.

இந்த நிலை­யில் ஈரோடு இடைத்­தேர்­தல் தொடர்­பாக தேமு­திக தலைமை அலு­வ­ல­கத்­தில் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த் தலை­மை­யில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் ஈரோடு கிழக்கு இடைத்­தேர்­த­லில் தேமு­திக தனித்துப் போட்­டி­ யிடு­வ­தாக முடிவு செய்­யப்­பட்­டது. இதன் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த பிரே­ம­லதா விஜ­ய­காந்த், ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் தேமு­திக சார்­பில் ஆனந்த் போட்­டி­யி­டு­கி­றார் என்று தெரி­வித்­தார்.

தமாகா தேர்தல் குழு அமைப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லுக்கு தேர்­தல் பணி­யாற்ற தமிழ் மாநில காங்­கி­ரஸ் சார்­பில் நிர்­வா­கி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த இடைத்­தேர்­த­லில் த.மா.கா, அ.இ.அ.தி.மு.க வேட்­பா­ளரை ஆத­ரித்து தேர்­தல் பணி­யாற்­று­கிறது. இதை­யொட்டி 16 பேர் அடங்­கிய தேர்­தல் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் அக்­கட்­சி­யின் தலை­வர் ஜி.கே. வாசன் தெரி­வித்­தார்.

கால்வாயில் பலியான சிறுவன்; ஊராட்சி செயலர் நீக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாதாளச் சாக்கடையில் விழுந்து சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் இடைக்காலமாக பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் பிரதீஷ் நேற்று முன்தினம் பாதாளச் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் சாஸ்திரம்பாக்கம் ஊராட்சிச் செயலாளர், டேங்க் ஆபரேட்டர் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.