சென்னை: குடியரசு தின விழா நாளை 26ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண் டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் எங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆளில்லா வானூர்தி கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றி சிறப்பிக்க உள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள காமராஜர் சாலையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஐந்தடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், குடியரசு விழாவையொட்டி நகரில் உள்ள உணவகங்கள், தங்கு விடுதிகளில் காவலர்கள் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமானநிலையம், ரயில், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி, மாநிலத்தில் 120,000 காவலர்களும் சென்னையில் 10,000 காவ லர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

