ஓபிஎஸ்: இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி டிடிவி தினகரன்: இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை

ஓபிஎஸ்: இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி டிடிவி தினகரன்: இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை

2 mins read
1dcd5728-4cda-4e80-9f30-33fef9d9b6cb
-

சென்னை: ஈ­ரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் அதி­முக போட்­டி­யி­டு­வது உறுதி என அக்­கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பாளர் ஓ.பன்னீர்­செல்­வம் அறி வித்துள்ளார்.

"கூடிய விரைவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர் ­க­ளிடம் பேசிய ஓபிஎஸ், "அதி­முக போட்டி­யி­டு­வது உறுதி. ஆனால், எடப்­பாடி பழ­னி­சாமி அணிக்கு இரட்டை இலைச் சின்­னம் கிடைக்­காது," என்றார்.

"பழ­னி­சாமி தாமா­கவே முன் வந்து இணை ஒருங்­கி­ணைப்­பாளர் பத­வியில் இருந்து வில­கி­யுள்­ளார். இப்ேபாதைய நிலையில் நான் மட்டுமே அதிமுகவின் ஒருங்­கி­ணைப்­பா­ளராக நீடித்து வருவதால் இரட்டை இலைச் சின்­னம் எங்­க­ளுக்குத்தான் கிடைக்­கும் என்ற முழு நம்பிக்கை உள்­ளது," என ஓபிஎஸ் கூறினார்.

ஆனா­ல், அதி­முக பிள­வு­பட்டு நிற்பதால் இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தம்மைப் போட்­டி­யி­டு­மாறு கட்­சி­யி­னர் வலி­யு­றுத்தி வரு­வ­தா­கவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தலுக்கான பிர சாரத்தைத் திமுக கூட்டணி வேகப்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் தொடர்ந்து ஆலோசனை மட்டுமே நடத்திக் கொண்டிருப்பதால் தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள போட்டியைக் கைவிட்டு பிரசாரத்துக்குத் தயாராக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த காங்­கி­ரஸ் கட்­சி­யின் திரு­ம­கன் ஈவெரா காலமானதை அ­டுத்து, அந்­தத் தொகு­திக்­கான இடைத்­தேர்­தல் பிப்­ர­வரி 27ஆம் தேதி நடை­பெறும் என தமிழக தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, திமுக-காங்­கி­ரஸ் கூட்­டணி சார்பில், அதி­கா­ர­பூர்­வ­ வேட்­பா­ள­ராக ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்நிலையில், அமைச்­சர்­கள் கே.என்.நேரு, முத்­து­சாமி உள் ளிட்டோர் பிர­சா­ரத்­தைத் தொடங்­கி­யதை அடுத்து தேர்­தல் களம் சூடு­பி­டிக்கத் தொடங்கியுள்­ளது.

அதி­முக அணி சார்­பாக போட்டி­யிட்ட தமாகா, அந்­தத் தொகு­தியை விட்­டுக்­கொ­டுத்­ததை அடுத்து, அதி­முக போட்­டி­யி­டுவதாக அறி­வித்து மற்ற சில தலை­வர்­க­ளைச் சந்­தித்து ஆத­ரவு கோரி வரு­கின்­ற­னர்.

இதனிடையே, "அதிமுக பல கூறுகளாக உடைந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியில் நிலவும் குழப்ப மான சூழல் எங்களுக்கு சாதக மாக அமைந்துள்ளது," என திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.