'துணிவு' படத்தைப் பார்த்து திருட வந்ததாக வாக்குமூலம்

'துணிவு' படத்தைப் பார்த்து திருட வந்ததாக வாக்குமூலம்

1 mins read
bdac87fe-ff85-4849-87dc-c709daf9b4b7
வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட விரக்­தி­யால் 'துணிவு' திரைப்­படத்­தைப் பார்த்து, அதில் வரும் காட்­சி­க­ளைப் போன்று வங்­கி­யில் கொள்­ளை­ய­டிக்க வந்­த­தாக அணில் ரகு­மான் வாக்குமூலம் அளித்­தது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி உள்ளது. படம்: த இந்து -

திண்­டுக்­கல்: திண்­டுக்­கல்­லில் பட்­டப் பக­லில் ஊழி­யர்­க­ளைக் கட்­டிப்­போட்டு அவர்­கள் மீது மிள­காய்ப் பொடியை வீசி வங்கி ஒன்றில் கொள்ளை முயற்­சி­யில் ஈடு­பட்ட இளை­ஞர் கைது செய்­யப்­பட்­டார்.

பொது­மக்­களின் உத­வி­யோடு வங்கி மேலா­ளர் கொள்­ளை­யனைப் பிடித்து காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­தார்.

விசா­ர­ணை­யில், கொள்ளை அடிக்க வந்த இளை­யர் திண்­டுக்­கல் மாவட்­டம், பூச்சிநாயக்­கன்­பட்டி பகு­தி­யைச் சேர்ந்த அணில் ரகு­மான் என்­பது தெரிய­வந்­தது.

வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட விரக்­தி­யால் 'துணிவு' திரைப்­படத்­தைப் பார்த்து, அதில் வரும் காட்­சி­க­ளைப் போன்று வங்­கி­யில் கொள்­ளை­ய­டிக்க வந்­த­தாக அணில் ரகு­மான் வாக்குமூலம் அளித்­தது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி உள்ளது.

திண்­டுக்­கல் தாடிக்­கொம்பு சாலை­யில் உள்ள இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்­கி­யில் இந்த துணி­க­ரச் சம்­ப­வம் நடைபெற்­றுள்­ளது.