செய்திக்கொத்து

2 mins read
874f8aee-888e-42c2-bde4-6db5f8480ffb
-
multi-img1 of 2

இரை தேடி கிரா­மத்­தில் நுழைந்த முத­லை­

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து இரைதேடி வெளியேறும் முதலைகளால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், அதில் இருக்கும் ராட்சத முதலைகள் உணவுதேடி வெளியே வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். படம்: தமிழக ஊடகம்

'சுருக்குமடி வலையைப் பயன்படுத்தலாம்'

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாள்களில் மட்டும் 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுருக்குமடி வலைகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

மாணவிகளின் நலன் கருதி கோரிக்கை

மதுரை: தமிழக கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் நலன் கருதி அனைத்து உயர்கல்வி மையங்களிலும் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை வைக்குமாறும் பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த தேவையான வசதிகளைச் செய்து தரும்படியும் உத்தரவிடும்படி மதுரை மாவட்டம், கே.கே.நகரைச் சேர்ந்த பொழிலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு, தமிழக சமூக நலத்துறை, உயர் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவற்றின் முதன்மைச் செயலர்களைப் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இரு வாரத்துக்குத் தள்ளி வைத்துள்ளது.

பேருந்து கவிழ்ந்து 70 பேர் காயம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், சேப்பாக்கத் தில் இருந்து விருத்தா சலத்துக்கு மாணவர்கள் உள்ளிட்ட 70 பேருடன் சென்ற பேருந்து வேப்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கியது. நெல் அறுவடை செய்யும் இயந்திர வாகனம் மோதுவது போல் வந்ததால் ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாகத் திருப்பியபோது வாய்க்காலில் பேருந்து தலைகுப்புறக் கவிழ்ந்தது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படம்: ஊடகம்