திராவிட 'மாடல்': தமிழ் அர்த்தம் குறித்து நீதிபதிகள் கேள்வி

திராவிட 'மாடல்': தமிழ் அர்த்தம் குறித்து நீதிபதிகள் கேள்வி

1 mins read

மதுரை: 'திரா­விட மாடல்' வார்த்­தை­களில் உள்ள 'மாடல்' என்ற ஆங்­கி­லச் சொல்­லுக்கு இணை­யான தமிழ் வார்த்தை என்­ன­வென்று உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

தமிழ்­நாட்­டில் உள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளின் விளம்­ப­ரப் பல­கை­களில் தமி­ழில் பெயர் இடம்­பெ­று­வது தொடர்­பான நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, 'திரா­விட மாடல்' என்ற சொல்­லா­டலை தமிழக அரசு அதிகம் பயன்­ப­டுத்­து­வதை நீதி­ப­தி­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

இந்த முக்­கி­ய­மான சொல்­லா­டலை ஏன் ஆங்­கி­லத்­தில் பயன்­படுத்­து­கி­றீர்­கள் என்று கேள்வி எழுப்­பிய நீதி­ப­தி­கள், முற்­றி­லும் தமிழில் பயன்­ப­டுத்­த­லாமே என்­றும் கருத்து தெரி­வித்­த­னர்.

இத­னைத்­தொ­டர்ந்து, தமி­ழக அர­சா­ணைப்­படி மாநி­லத்­தில் உள்ள தொழில் நிறு­வ­னங்­கள் ஆங்­கி­லம், தமி­ழில் பெயர் வைக்க­வேண்­டும் என்று நீதி­ப­தி­கள் கூறி­னர்.

ஆங்­கி­லத்­தில் மட்­டும் பெயர்ப் பல­கை­கள் வைத்­தி­ருக்­கும் நிறு­வனங்கள்மீது இது­வரை எடுக்­கப்­ப­ட்ட நடவடிக்­கை­கள் குறித்தும் கேள்வி எழுப்­பி­னர்.

இது­கு­றித்து விரி­வான அறிக்­கை­யைத் தாக்­கல் செய்ய தொழி­லா­ளர் நலத்­துறை செய­லா­ள­ருக்கு உத்­த­ர­விட்ட நீதி­ப­தி­கள் விசா­ர­ணையைப் பிப்­ர­வரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்­த­னர்.

முன்னதாக நீதி­ப­தி­கள், "தமிழ் வளர்ச்­சிக்கு அனைத்து துறை­யி­ன­ரும் கடு­மை­யாகப் பாடு­பட வேண்­டும். குறிப்­பாக, சட்­டக்­கல்­லூரி உள்­ளிட்ட அனைத்து கல்­லூ­ரி­க­ளி­லும் பாடப்­புத்­த­கங்­களைத் தமி­ழில் வழங்கவேண்­டும். வழக்குத் தொடர்­பாக குறிப்பு எடுக்கப் பயன்­படும் சட்ட புத்­த­கங்­க­ளை­யும் தமி­ழில் கொண்டு வரவேண்­டும்" என்று கருத்து தெரி­வித்­த­னர்.