'என் உயிர் உள்ளவரை இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்கமுடியாது'

'என் உயிர் உள்ளவரை இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்கமுடியாது'

1 mins read

சென்னை: நான் உயி­ரு­டன் இருக்­கும்வரை இரட்டை இலைச் சின்­னத்தை முடக்கவிட மாட்­டேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி கே சசி­கலா கூறியுள்ளார்.

ஓ.பன்­னீர்­செல்­வம், பழ­னி­சாமி­யின் செயல்­பா­டு­கள் திமு­க­வுக்குச் சாத­மாக இருப்­ப­தாகவும் அவர் குற்­றம்சாட்­டி­யுள்­ளார்.

திரு­வா­ரூர் மாவட்­டம், மன்­னார்­கு­டி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சசிகலா, ஈரோடு இடைத்­தேர்­தல் விவ­கா­ரத்­தில் அதி­முக தொண்­டர்­களின் முடிவு தான் தன் முடிவு என்றும் கூறி­னார்.

இரட்டை இலைச் சின்­னத்தை எக்­கா­லத்­தி­லும் யாரும் எது­வும் செய்யமுடி­யாது என்று கூறிய சசி­கலா, ஓபி­எஸ் இபி­எஸ்சை இணைக்க முயற்சி எடுத்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

அதி­முக சித­றுண்டு இருப்­ப­தற்கு பாஜக கார­ணம் அல்ல என்­று விளக்­கமளித்த அவர், "நாம் அடுத்­த­வரை குறை கூறத் தேவை­யில்லை. நாம் சரி­யாக இருந்­தால் போதும். என்னை யாரா­லும் எதுவும் செய்ய முடி­யுமா? என் நிழ­லி­டம் கூட யாரும் நெ­ருங்க முடியாது," என்றார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­குள் அதி­முக ஒன்­றாக இணை­யும் என்­றும் சசி­கலா கூறியுள்ளார்.

தேர்­தல் சம­யத்­தில் பெட்டி யைத் தூக்­கிக்­கொண்டு ஊர் ஊராகச் சென்று மு.க. ஸ்டா­லின் பெற்ற கோரிக்கை மனுக்­கள் அடங்­கிய பெட்­டி­யின் சாவி தொலைந்துவிட்­ட­தாகக் கரு­து­வ தாகவும் அவர் விமர்­சித்துள்ளார்.