காங்கிரசுக்கு மநீம ஆதரவு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; பல்வேறு தலைவர்களின் நிலைப்பாடு

காங்கிரசுக்கு மநீம ஆதரவு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; பல்வேறு தலைவர்களின் நிலைப்பாடு

2 mins read
77a37b3d-7d9f-4eaa-a263-ec2d0c6224e2
-

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டும் காங்­கி­ரஸ் வேட் பாளர் ஈவி­கே­எஸ் இளங்­கோவ னுக்கு மக்­கள் நீதி மய்­யம் ஆத­ர­ வ­ளிக்­கும் என அக்­கட்­சி­யின் தலை­வர் கமல்­ஹா­சன் நேற்று அறி­வித்­தார்.

தன் குடும்­பத்­தில் நிகழ்ந்த துய­ரத்­தை­யும் தாண்டி சேவை செய்ய கள­மி­றங்­கி­யுள்ள ஈவி­கே­எஸ் இளங்­கோ­வனை தான் முழு மன­து­டன் ஆத­ரிப்­ப­தா­க­வும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

ஈரோடு கிழக்கு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த காங்­கி­ரஸ் கட்­சி­யின் திரு­ம­கன் ஈவெரா கால­மா­னதை அடுத்து, அத் தொகு­தி­யில் பிப்­ர­வரி 27ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடத்­தப்பட உள்ளது.

இதைத்­தொ­டர்ந்து, திமுக-காங்­கி­ரஸ் கூட்­ட­ணிக் கட்சி களின் சார்­பில் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன், இதர கட்­சித் தலை­வர்­க­ளை­யும் சந்தித்து ஆத­ரவு கோரி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், மநீம கட்­சி­யின் நிலைப்­பாடு குறித்து அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பெரும் எதிர்­பார்ப்பு நிலவி வந்த நிலை­யில், சென்னை ஆழ்­வார்­பேட்­டை­யில் உள்ள கட்­சித் தலைமை அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார் கமல்­ஹா­சன்.

அப்­போது, "ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வ­னுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்­குகிறேன்.

"வர­லாறு காணாத வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெறச் செய்ய நானும் கட்­சி­யி­ன­ரும் பாடுபடு­வோம்," என்­றார்.

இத­னி­டையே, தேர்­த­லில் பாஜக போட்­டி­யி­டத் தயாரா என தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ். அழ­கிரி அண்ணா மலைக்குச் சவால் விட்­டுள்­ளார்.

"கூட்­ட­ணி­யில் அதி­மு­கவே பெரிய, வலுவான கட்­சி­யாக உள்­ளது. பாஜகவின் பலத்தை நிரூ­பிக்கவேண்­டிய அவ­சி­ய­மில்லை," என பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை கூறியுள்ளார்.

இந்த இடைத்­தேர்­த­லில் வேறு வேறு வேட்பா­ளர்­க­ளைப் போட்டு நாம் என்ன சாதிக்­கப் போகிறோம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

"அதி­முக இணைய வேண்­டும் என்­பதே பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் விருப்­பம். ஒரு பெரிய மனி­தன் நல்­லது சொன்­னால் அதைக் கேட்கவேண்டும் அல்­லவா?" என ஓ.பன்­னீர்­செல்­வம் கூறி­யுள்ளார்.