10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை

10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை

2 mins read
4853789a-1166-46fd-9161-b591ab6ec05c
-

கோவை: கோவை­யைச் சேர்ந்த இரு குழந்­தை­க­ளுக்­குத் தாயான பெண் ஒரு­வர், தாய்ப்­பால் கிடைக்­காத குழந்­தை­க­ளுக்குத் தாயாக விளங்கி வரு­கி­றார்.

கடந்த 10 மாதங்­களில் 135 லிட்­டர் தாய்ப்­பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்­துள்­ளார்.

கோயம்­புத்­தூர் மாவட்­டம், பி.என்.புதூ­ரைச் சேர்ந்தவரான வித்யா, 27, ஊட்­டச்­சத்து குறை­பா­ட்டுடன் எடை குறை­வா­கப் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு தாய்ப்­பால் தானம் மூலம் மறு­வாழ்வு கிடைக்க உதவி வரு­கி­றார்.

இது­கு­றித்து ஸ்ரீவித்யா கூறு கையில், "பிறந்த குழந்­தை­க­ளின் ஒரே உணவு தாய்ப்­பால் மட்­டுமே. இதன்மூலம் குழந்­தை­க­ளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதி­க­ரித்து, உட­லுக்குத் தேவை­யான ஊட்­டச்­சத்­தும் கிடைக்­கிறது.

"எனவே, என் கணவர் பைரவ் வின் ஆதரவுடன், தாய்ப்­பால் கிடைக்­காத பிறந்த குழந்­தை­களுக்குத் தாய்ப்பாலை தானம் செய்யத் தொடங்கினேன்.

"எங்­க­ளுக்கு அசிந்த்யா என்ற 4 வயது மக­னும் ப்ரக்­ருதி என்ற பத்து மாத மகளும் உள்­ள­னர்.

"திருப்­பூ­ரைச் சேர்ந்த ரூபா செல்­வ­நா­யகி என்­ப­வர் நடத்­தி ­வ­ரும் அமிர்­தம் அறக்­கட்­டளை மூல­ம், தாய்ப்­பால் தானத்தை சமூ­க­ச் சேவை அடிப்­ப­டை­யில் அளித்து வரு­கி­றேன்.

"என் மகள் பிறந்த 5வது நாள் முதல் தானம் வழங்கி வரு­கி­றேன். ஏழு மாத காலத்­தில் 106 லிட்­டர் தாய்ப்­பால் தானம் வழங்கி னேன். இப்­போது பத்து மாதமாகி உள்ள நிலையில், 135 லிட்­ட­ருக்கு மேல் தானம் செய்­துள்­ளேன்.

"தின­மும் குழந்­தைக்கு அளித்­ததுபோக, மீதமுள்ள தாய்ப்­பாலை அதற்கென பிரத்தி­யே­க­மாக உள்ள பாக்­கெட்­டில் சேக­ரித்து, குளிர்­சா­தனப்பெட்டியில் வைத்துவிடு­வோம். குறிப்­பிட்ட நாள்­க­ளுக்கு ஒரு­முறை தன்­னார்­வ­லர்­கள் அரசு மருத்­து­வ­ம­னைக்­கு அவற்றைப் பெற்றுச் செல்வர்.

"இப்படி தானம் செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படும், கண்­பட்­டு­விடும், நம் குழந்­தைக்குப் பற்­றா­மல் போய்­வி­டும் என்­றெல்­லாம் சில பெரி­ய­வர்­கள் சொல்­வர். அப்­படி எது­வும் இல்லை," என்கிறார் ஸ்ரீவித்யா.

அதி­க­ அ­ள­விலான தாய்­மார்­கள் இதில் அக்­கறை காட்டும்படி யும் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

ஆசிய சாதனை புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்ள இவ­ரது சாத­னைக்குத் தன் கணவரும் குடும்­பத்தி­னரும் உறு­துணை­யாக உள்­ள­தாகவும் ஸ்ரீவித்யா பெரு­மி­தத்­து­டன் கூறி­யுள்ளார்.