சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீதான தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ல் இயற்றப் பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தின்கீழ் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இதனை மீறியதாகக் கூறி சில நிறுவனங்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்ட வில்லை என்றும் புகையிலை பொருளுக்குத் தடைவிதிக்க இரு சட்டங்களும் அதிகாரம் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டு, உணவுப் பாதுகாப்பு ஆணையரின் தடை உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

