இணக்கம் காட்டிய முதல்வரும் ஆளுநரும்

இணக்கம் காட்டிய முதல்வரும் ஆளுநரும்

2 mins read
4294b00f-45c0-431a-81b3-c2f8c941157a
-

அண்மைய காலமாக தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையில் பனிப்போர் நிலவினாலும் நாட்டின் 74வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது இருவரும் இன்முகத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தனர்.

சென்னை: சென்னை மெரினா கடற்­க­ரை­யில் இந்­தி­யா­வின் 74வது குடி­ய­ரசு தின விழாவை முன்­னிட்டு தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி தேசி­யக் கொடி ஏற்­றி­னார். பின்­னர் முப்­ப­டை­களின் அணி­வ­குப்பு மரி­யா­தை­யை­யும் அவர் ஏற்­றுக்­கொண்­டார்.

குடி­ய­ரசு தினத்தை முன்­னிட்டு ஒவ்­வோர் ஆண்­டும் சென்னை கடற்­க­ரைச் சாலை­யில் காந்தி சிலை அருகே மாநில ஆளு­நர் தேசி­யக்­கொ­டியை ஏற்­று­வது வழக்­கம். தற்­போது அங்கு மெட்ரோ ரயில் பணி­கள் நடை­பெ­று­வ­தால் உழைப்­பா­ளர் சிலை அருகே கொடி­யேற்­றும் விழா நடை­பெற்­றது. வீரச்­செ­யல் புரிந்­தோ­ருக்கு குடி­ய­ரசு தினப் பதக்­கங்­களை முதல்­வர் வழங்­கி­னார்.

பின்­னர், பல்­வேறு பிரி­வு­க­ளின் அணி­வ­குப்­பும் தொடர்ந்து, பள்ளி, கல்­லூரி மாணவ, மாண­வி­ய­ரின் கலை நிகழ்ச்­சி­களும் நடை­பெற்­றன. இவற்­றைத் தமி­ழக முதல்­வர் மு. க. ஸ்டா­லின், ஆளு­நர் ஆர். என். ரவி உள்­ளிட்­டோர் பார்­வை­யிட்­ட­னர்.

விழா­விற்கு முத­லில் தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் வருகை தந்­தார். அவ­ரைத் தொடர்ந்து ஆளு­நர் ரவி விழா­விற்கு வருகை புரிந்­தார்.

திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடையே இணக்­க­மான சூழல் இல்­லாத நிலை­யில் நேற்று ஆளு நரை இன்­மு­கத்­து­டன் பூங்­கொத்து தந்து வர­வேற்று உப­சரித்­தார் முதல்­வர் ஸ்டா­லின்.

இரு­வ­ரும் ஏறக்­கு­றைய ஒரு மணி நேரம் அரு­க­ருகே அமர்ந்து கலை நிகழ்ச்­சி­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர்.

முன்­ன­தாக, தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் ஆளு­நர் பாதி­யி­லேயே வெளி­யே­றிய சம்­ப­வத்­துக்­குப் பிறகு 15 நாள்­கள் கழித்து முதல்­வ­ரும் ஆளு­ந­ரும் நேற்று மீண்­டும் நேருக்கு நேர் சந்­தித்­துக்­கொண்­ட­னர்.

ஆளு­நர் தமது மனைவி லட்­சுமி ரவி­யு­டன் வந்­தி­ருந்­தார். முதல்­வர் ஸ்டா­லி­னும் தமது மனைவி துர்கா ஸ்டா­லி­னு­டன் நிகழ்ச்­சி­யைக் கண்டு களித்­தார்.

நிகழ்ச்­சி­யில் இறு­தி­யாக அலங்­கார ஊர்­தி­க­ளின் அணி­வகுப்பு இடம்­பெற்­றது. இதில் முத­லில் வந்த 'தமிழ்­நாடு வாழ்க' என்ற வாச­கத்­து­டன்­கூ­டிய அலங்­கார ஊர்தி பல­ரின் கவ­னத்தை ஈர்த்­தது.

இறு­தி­யில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்டு குடி­ய­ரசு தின­விழாக் கொண்­டாட்­டம் நிறை­வ­டைந்­தது. பின்­னர் விழா மேடை­யில் இருந்து புறப்­பட்­டுச் சென்ற ஆளு­நரை முதல்­வர் இன்­மு­கத்­து­டன் வழி­ய­னுப்பி வைத்­தார்.

நேற்று மாலை ஆளு­நர் மாளி­கை­யில் நடை­பெற்ற தேநீர் விருந்­தில் முதல்­வர் ஸ்டா­லின் பங்­கேற்­றார். பல்­வேறு சட்ட மசோ­தாக்­க­ளுக்கு ஆளு­நர் கையெ­ழுத்­தி­டா­த­தைச் சுட்­டிக்­காட்டி இதற்கு முன்­னர் ஆளு­நர் நடத்­திய பொங்­கல் விழா தேநீர் விருந்தை முதல்­வர் புறக்­க­ணித்­தது குறிப்­பி­டத்­தக்­கது. ஆளு­நர் நேற்று முன்­தி­னம் முதல்­வ­ரைத் தொலை­பேசி மூலம் தேநீர் விருந்­துக்கு வரு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் முதல்­வர் அதை ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. முதல்­வ­ரு­டன் அமைச்­சர் துரை­மு­ரு­க­னும் இதில் கலந்துகொண்டார்.