கற்சிற்பம் செதுக்கும் வெளிநாட்டினர்

கற்சிற்பம் செதுக்கும் வெளிநாட்டினர்

1 mins read
869a6549-c8bc-41da-8eb6-c9460fe8544f
-

மாமல்­ல­பு­ரம்: மாமல்­ல­பு­ரத்­தில் வெளி­நாட்­டுச் சிற்­பக் கலை­ஞர்­கள் சிற்­பம் செதுக்­கும் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

சுவீடனில் இருந்து சுற்­றுலா வந்த இவர்­கள், பல்­லவ மன்­னர்­க­ளின் காலத்­தில் உரு­வான கற்­சிற்­பங்­க­ளைக் கண்டு வியந்­த­னர். எனவே இங்கு தங்கி பயிற்சி­பெற முடிவு எடுத்­த­னர்.

சுவீ­டனைச் சேர்ந்த சிற்­பக்­கலை­ஞர் ஸ்டெஃபனோவிற்கு வயது 80. இவர் ஐரோப்பிய நாடு­க­ளின் சிற்­பக்­க­லை­ஞர்­கள் கூட்­ட­மைப்புக்குத் தலைமைப் பொறுப்பெற்றுள்ளார்.

இவ­ரு­டைய தலை­மை­யில் இத்­தாலி, ஜெர்­மனி, சுவீ­டன், டென்­மார்க், நார்வே, நைஜீ­ரியா உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த சிற்­பக் கலை­ஞர்­கள் 10 பேர் இந்­தி­யா­விற்­குச் சுற்­றுலா வந்­துள்­ள­னர். நாட்­டின் மாநி­லங்­க­ளுக்­குச் சென்ற இக்­கு­ழு­வி­னர், மாமல்­ல­பு­ரம் வந்­த­போது அங்­குள்ள கடற்­க­ரைக் கோயில், அர்ச்­சு­ணன் தபசு, ஐந்­து­ர­தம் போன்ற பல்­லவ மன்­னர்­கள் காலத்­திய சிற்­பங்­க­ளைப் பார்த்து வியந்­த­னர். பல்­ல­வர் பாணி சிற்­பங்­களை வடிக்­கக் கற்­றுக்­கொள்­ளும் ஆர்­வத்­தில், மாமல்­ல­பு­ரத்­தில் உள்ள அரசு சிற்­பக் கலைக்­கல்­லூ­ரி­யின் கற்­சிற்­பப் பிரி­வில் பணி­பு­ரிந்த முன்­னாள் பேரா­சி­ரி­ய­ரும் புகழ்­பெற்ற சிற்­பி­யு­மான பாஸ்­க­ரனை அணு­கி­னர்.

அவ­ரும் முதற்­கட்­ட­மாக, தனது சிற்­பக்­க­லைக்­கூ­டத்­தில் கருங்­கல், பச்­சைக்­கல், கிரா­னைட் கற்­களில் சிற்­பம் செதுக்கும் பயிற்­சியை நேற்று முன்­தி­னம் தொடங்­கி­னார்.

இந்­தப் பயிற்சி மூன்று மாத காலம் நீடிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பயிற்­சி­யின் தொடக்க நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக தமி­ழக அர­சின் கலை, பண்­பாட்­டுத் துறை இயக்­கு­நர் செ.ரா. காந்தி கலந்­து­கொண்டு வெளி­நாட்­டுக் கலை­ஞர்­க­ளுக்கு தமிழ்க் கலா­சா­ரப்­படி சால்வை அணி­வித்­துச் சிறப்­பித்­தார்.