கோயில் நிதியை அறநிலையத் துறை பயன்படுத்த இயலாது

கோயில் நிதியை அறநிலையத் துறை பயன்படுத்த இயலாது

1 mins read

சென்னை: இந்து சமய அற­நி­லை­யத் துறை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள கோயில்­க­ளின் நிதி­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வதை எதிா்த்து சென்னை உயா் நீதி­மன்­றத்­தில் ரமேஷ் என்­பவா் மனு தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

இந்த வழக்கு நேற்று முன்­தினம் மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது மனு­தாரா், கோயில் நிதி­யில் அற­நி­லை­யத் துறை அதி­கா­ரி­க­ளின் அலு­வ­ல­கங்­களில் கட்­டு­மா­னப் பணி மேற்­கொள்­ள­வும் முந்­தைய ஆட்­சி­யில் அமைச்­ச­ருக்கு வாக­னங்­கள் வாங்­க­வும் கணி­னி­ம­ய­மாக்­கல், பேருந்து நிலைய விரி­வாக்­கம், மண்­ட­பங்­கள், பக்­தா்­கள் தங்­கும் விடு­தி­கள் கட்­டு­தல் ஆகி­ய­வற்­றுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இதை­ய­டுத்து நீதி­ப­தி­கள், அற­நி­லை­யத் துறைக்கு தேவை­யான செல­வு­க­ளுக்­குக் கோயில் நிதி­யைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது, அற­நி­லை­யத் துறை செல­வு­க­ளுக்­குத் தொகுப்பு நிதி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் எனக் கூறி­னர். விசா­ரணை அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.