தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனி கோயில் குடமுழுக்கு: ஹெலிகாப்டரில் மலர் தூவல்

1 mins read

திண்­டுக்­கல்: தமி­ழ­கத்­தின் புகழ்­பெற்ற பழனி தண்­டா­யு­த­பாணி சுவாமி திருக்­கோ­யி­லில் 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இன்று குட­மு­ழுக்கு நடை­பெ­று­கிறது.

குட­மு­ழுக்கு விழாவை முன்­னிட்டு திண்­டுக்­கல் மாவட்­டம் முழு­வ­தும் இன்று உள்­ளூர் விடு­முறை அளித்து தமிழ்­நாடு அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

குட­மு­ழுக்கு விழா, உள்­ளூர் நேரப்­படி இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை நடை­பெற உள்­ளது.

குட­மு­ழுக்கு விழா­வின் போது தீபா­ரா­த­னைக்­குப் பிறகு ராஜ­கோ­பு­ரம் உள்­பட கோயில் வளா­கம் முழு­வ­தும் ஹெலி­காப்­டர் மூலம் மலர் தூவ ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­காக கர்­நா­டக மாநி­லத் தலை­ந­கர் பெங்­க­ளூ­ரில் இருந்து தனி­யார் ஹெலி­காப்­டர் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளது.

பழனி அருள்­மிகு தண்­டா­யு­த­பாணி திருக்­கோ­வி­லுக்­குச் சொந்­த­மான கலை, அறி­வி­யல் பண்­பாட்­டுக் கல்­லூ­ரி­யின் திட­லில் இந்த ஹெலி­காப்­டர் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.