அரியலூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கருவிகள் தொடர்பான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை இதனைத் தெரிவித்தது.
இக்கல்லூரி மாணவர்கள் 40 பேர், துறைப் பேராசிரியர் ரவி தலைமையில் அண்மையில் தொல்பொருள் படிமங்கள் குறித்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ரவி, "அரியலூர் அரசு சிமென்ட் ஆலை பகுதியில் சேகரிக்கப்பட்ட தொன்மை வாய்ந்த கற்களில் கடல் நட்சத்திர மீன்கள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. 2,000 ஆண்டுகளுக்குமுன் மனிதர்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்தியதற்கான இரும்புக் கசடுகள் கிடைத்தன. அந்தப் பகுதி கடற்கரையாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன," என்றார்.

