மது விற்பனை அபாரம்: டாஸ்மாக் ஊழியர்கள் நால்வருக்கு பாராட்டுச் சான்றிதழ்

மது விற்பனை அபாரம்: டாஸ்மாக் ஊழியர்கள் நால்வருக்கு பாராட்டுச் சான்றிதழ்

1 mins read

கரூர்: டாஸ்­மாக் மதுக்­கடை வசூல் சிறப்­பாக இருந்­த­தா­கப் பாராட்டி ஊழி­ய­ருக்கு சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டது சமூக ஊட­கங்­களில் விவா­தப் பொரு­ளாகி உள்­ளது.

கரூ­ரில் நடை­பெற்ற குடி­ய­ரசு தின விழா­வில் கலந்­து­கொண்ட அம்­மா­வட்ட ஆட்­சி­யர் பிர­பு­சங்­கர் பல்­வேறு துறை­களில் சிறப்­பா­கப் பணி­யாற்­றிய அலு­வ­லர்­க­ளுக்கு கேட­ய­மும் பாராட்­டுச் சான்­றி­த­ழும் வழங்­கி­னார்.

சான்­றி­தழ் பெற்­ற­வர்­களில் டாஸ்­மாக் நிறு­வன மாவட்ட மேலா­ளர் ஒரு­வ­ரும் விற்­ப­னை­யா­ளர் மூவ­ரும் அடங்­கு­வர். டாஸ்­மாக் நிர்­வா­கத்­துக்கு வரு­வாய் ஈட்­டும் பணி­யைச் சிறப்­பாக மேற்­கொண்­ட­தற்­காக பாராட்­டுச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் மதுக்­க­டை­களை மூட வேண்­டும் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வரும் நிலை­யில், இவ்­வாறு பாராட்­டுச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டது விமர்­ச­னத்­துக்கு ஆளாகி உள்­ளது.