'தமிழக அரசுதான் இடத்தை தேர்வு செய்தது'

'தமிழக அரசுதான் இடத்தை தேர்வு செய்தது'

1 mins read

காஞ்சிபுரம்: பரந்­தூர் விமான நிலை­யத்­துக்­கான இடத்தை தமிழக அர­சு­தான் தேர்வு செய்­தது என மத்­திய விமானப் போக்­கு­வரத்து துறை­யின் இணை அமைச்­சர் விகே சிங் தெரி­வித்­துள்­ளார்.

நெல்­லை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், புதிய விமான நிலை­யப் பணி­கள் விரை­வில் தொடங்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்­டார்.

பரந்­தூர் பகு­தி­யில் புதிய விமான நிலை­யத்­துக்­காக ஏரா­ள­மான நிலங்­க­ளைக் கைய­கப்­படுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கு அப்­ப­குதி மக்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர். அங்கு கடந்த சில மாதங்­க­ளாக பொது­மக்­களும் சமூக ஆர்­வ­லர்களும் பல்­வேறு தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மத்­திய அமைச்­சர் இது குறித்து விளக்­கம் அளித்­துள்­ளார்.