காதலியுடன் சண்டை: எலும்புக்கூடு ஆனது 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசுக் கார்

காதலியுடன் சண்டை: எலும்புக்கூடு ஆனது 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசுக் கார்

1 mins read
72a7cd8f-46d3-4f6e-864a-f5943652ebbd
-

காஞ்­சி­பு­ரம்: காத­லி­யு­டன் ஏற்­பட்ட சண்டை கார­ண­மாக ஆத்­தி­ர­மடைந்த இளம் மருத்­து­வர் ஒரு­வர் தனது 70 லட்­சம் ரூபாய் மதிப்­பி­லான சொகுசு (பென்ஸ்) காரை பெட்­ரோல் ஊற்றி எரித்­துள்­ளார்.

இதைப்­பார்த்து அவ­ரது காத­லி­யும் சாலை­யில் நடந்துசென்ற பொது­மக்­களும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

தரு­ம­புரி மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் கவின், 28. கடந்த ஆண்டு மருத்­து­வப் படிப்பை முடித்­த­வர், காஞ்­சி­பு­ரம் அரு­கே­யுள்ள தனி­யார் மருத்துவக் கல்­லூ­ரி­யில் படித்­து­வ­ரும் காவ்யா என்­ப­வரைக் காத­லித்து வந்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இரு­வ­ரும் காரில் வெளியே சென்­ற­போது அவர்­க­ளுக்­குள் திடீ­ரென வாக்கு­வா­தம் ஏற்­பட்­டு சண்டை முற்றியுள்ளது.

இத­னால் கடும் கோபம் அடைந்த கவின் தனது சொகுசுக் காரை பெட்­ரோல் ஊற்றி எரித்­தார். தீய­ணைப்­புத் துறை­யி­னர் தீயை அணைக்க தீவிர முயற்சி செய்­த­னர். எனி­னும் கார் எரிந்து எலும்புக் கூடா­னது. இது தொடர்­பாக காஞ்­சி­பு­ரம் காவலர்கள் விசாரணை நடத்தி வரு­கின்­ற­னர்.