ஓபிஎஸ் தரப்பு: நாங்களே உண்மையான அதிமுக; இபிஎஸ் தரப்பு: பிரிவும் இல்லை, பிளவும் இல்லை

2 mins read

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் அதி­முக சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர் குறித்து நாளை 30ஆம் தேதி அறி­விப்பு வெளி­யா­கும் என தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த இடைத்­தேர்­தல் தொடர்­பாக கடந்த இரண்டு நாள்­க­ளாக பழ­னி­சாமி தரப்­பி­னர் ஆேலா சனை நடத்­தி­ வந்ததைத் ெதாடர்ந்து, பன்­னீர்­செல்­வம் தரப்­பும் ஆலோ­சனை நடத்­தி­யுள்­ளது.

இதுகுறித்து பேட்­டி­ய­ளித்த பன்­னீர்செல்­வம் தரப்­பி­னர், தாங்­களே உண்­மை­யான அதி­மு­க­வினர் என்­றும் இந்த இடைத்­தேர்­த­லில் அதிக வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் தங்­கள் தரப்பு வெற்­றி­பெறும் என்­றும் கூறி­னர்.

இது­கு­றித்து சென்­னை­யில் பேட்­டி­ய­ளித்த முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார், "ஓபி­எஸ் தரப்பு என்­பது வெறும் நான்கு அல்­லது ஐவர் கொண்ட குழு­தான். அதனை அணி என்று சொல்ல முடி­யாது. நாளை இபி­எஸ் தரப்­பில் வேட்­பா­ளர் அறி­விக்­கப்­பட்டு, இரட்டை இலைச் சின்­னத்­தில் தங்­கள் அணி போட்­டி­யிட்டு வெல்­லும்," என்று கூறி­னார்.

"அதி­மு­க­வில் பிரிவு, பிளவு என ஊட­கங்­கள்­தான் மாயையை உரு­வாக்­கு­கின்­றன. எங்கள் அணியில் பிரி­வும் இல்லை, பிள­வும் இல்லை. பழ­னி­சாமி என்ற ஒற்­றைத் தலை­மை­யின்கீழ் நாங்கள் அனைவரும் ஒன்­றாக இருக்­கி­றோம்," என்­றார்.

இத­னி­டையே, இடைத்தேர்­த­லில் அதி­முக கூட்­ட­ணி­யின் வெற்றி மிகப் பிர­கா­ச­மாக உள்­ள­தாக தமாகா தலை­வர் ஜிகே வாசன் நம்­பிக்கைத் தெரி­வித்­துள்­ளார்.

இடைத்­தேர்­தலை சாக்­கடை என்று விமர்­சித்த ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன், இப்­போது ஏன் அதே சாக்­க­டை­யில் இறங்­கு­கிறார் எனக் கேட்டுள்­ளார் அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன். ஓபி­எஸ்-இபி­எஸ் இரு வரும் இரட்டை இலைச் சின்­னத்துக்குப் போட்டி போட்டால் கிடைக்­காது. இப்படித்தான் கடந்த 2017ல் சின்­னம் முடக்­கப்­பட்­டது என்று கூறியுள்ளார்.