வாடகை வீட்டுக்கு தட்டுப்பாடு

வாடகை வீட்டுக்கு தட்டுப்பாடு

1 mins read

ஈரோடு: ஈரோடு இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு நகரில் வெளி மாவட்டத்தினரும் முற்றுகையிட்டு வருகின்றனர். இவர்கள் இடைத்தேர்தல் முடியும்வரை இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இங்குள்ள சாதாரண வீடுகளுக்கு ரூ.40,000 முதல் ரூ.60,000 வரையும் பங்களா வீடுகளுக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரையும் வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்கின்றனர். தங்கு விடுதிகளில் தங்கினால் காவலர்கள், பறக்கும் படை சோதனைக்கு ஆளாக நேரிடும் என்பதால் முக்கிய பிரமுகர்களின் விருப்பத் தேர்வாக வீடுகள் அமைந்துள்ளதாகத் தகவல்.