இலங்கை வசம் வந்த மூன்று படகுகள்

இலங்கை வசம் வந்த மூன்று படகுகள்

1 mins read

சென்னை: தமிழக மீனவர்களின் மூன்று படகுகளை அரசுடைமை யாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மீனவக் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராமேஸ்வரம், கோட்டைப்பட்டி னம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் இருந்து 2021, 2022ஆம் ஆண்டுகளில் மீன்பிடிக்கச் சென்ற 17 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தப் படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் முன்னி லையாவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் 14 பேர் கொண்ட மீனவர் குழு வினர் யாழ்ப்பாணம் சென்றனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.கஜநிதிபாலன், 17 படகுகளில் நான்கு படகுகள் மீதான தீர்ப்பு வரும் 31ஆம் தேதியும் 10 படகுகள் மீதான விசாரணையை மார்ச் ஒன்றாம் தேதிக்கும் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். மூன்று உரிமை யாளர்கள் முன்னிலையாகாத தால், மூன்று படகுகள் அரசு டைமையாக்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.