பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா; பக்தர்கள் படையெடுப்பு

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா; பக்தர்கள் படையெடுப்பு

2 mins read
5056fbfe-3c58-45a9-a792-568dea91a812
-

பழனி: முரு­கப்­பெ­ரு­மா­னின் 3ஆம் படை வீடான பழனி தண்­டா­யு­த­பாணி சாமி கோயில் திரு­வி­ழாக்­க­ளி­லேயே தைப்­பூசத் திரு­விழா முக்­கிய சிறப்பு வாய்ந்­தது. இவ்­வி­ழா­விற்­காக மதுரை, காரைக்­குடி, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், தேனி, விருது நகர் உள்­ளிட்ட தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் இருந்து பக்­தர்­கள் பாத யாத்­தி­ரை­யாகப் பழ­னிக்கு வருகை தரு­வது வழக்­கம்.

இந்த நிலை­யில் தைப்­பூசத் திரு­விழா நேற்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்­குள் கிழக்கு ரத­வீ­தி­யில் கொடி­யேற்றத்­து­டன் தொடங்­கி­யது.

இத­னை­யொட்டி முத்­துக்­கு­மா­ர­சு­வாமி, வள்ளி-தெய்­வானை சமே­த­ராக எழுந்­த­ருளி பக்­தர்­ க­ளுக்குக் காட்­சி­ய­ளித்­தார்

முக்­கிய நிகழ்ச்­சி­யான தைப்­பூசத் தேரோட்­டம் பிப்­ர­வரி 4ஆம் தேதி நடக்­கிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்­குள் வள்ளி-தெய்­வானை சமேத முத்துக்கு­மா­ர­சாமி தோளுக்­கி­ணி­யாலில் சண்­முக நதியில் எழுந்­த­ருளி தீர்த்­தம் கொடுத்த நிகழ்ச்­சி­யும் மதி­யம் 11 மணிக்கு மேல் 12 மணிக்­குள் திருத்­தே­ரில் எழுந்­த­ரு­ளும் நிகழ்ச்­சி­யும் மாலை 4.30 மணிக்கு திருத்­தே­ரோட்­டம், தேர்க்­கால் பார்த்­தல் நிகழ்ச்­சி­யும் நடை­பெ­றும்.

பிப்­ர­வரி 5ம் தேதி திருக்கல்­யா­ண­மும் அன்று இரவு சாமி வீதி ­உ­லா­வும் நடை­பெ­றும். பிப்­ர­வரி 7ஆம் தேதி தெப்­பத்­தேர் உற்ச­வ­சத்­து­டன் திரு­விழா நிறைவுபெறு­கிறது.

இதற்­கிடையே தைப்­பூசத் திரு விழாவை முன்­னிட்டு ஏரா­ள­மான பக்­தர்­கள் பழ­னிக்கு மீண்­டும் அதிக அள­வில் படை­யெ­டுத்து வரு­கின்­ற­னர். குறிப்­பாக கோவை, சேலம், திருப்­பூர், மதுரை உள்­ளிட்ட வெளி மாவட்­டங்­களை சேர்ந்த பக்­தர்­கள் பழ­னிக்கு அதிக அள­வில் வந்­த­னர்.

அண்­மை­யில்­தான் பழனி தண்­டா­யு­த­பாணி சாமி கோயிலில் 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு குட முழுக்கு நடை­பெற்­றது.