மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாளில் உறுதிமொழி

1 mins read
b063c482-f2f0-4f7f-9c82-12d683826bff
நாடு முழு­வ­தும் மகாத்மா காந்­தி­ய­டி­க­ளின் 76வது நினைவு நாள் நேற்று அனு­ச­ரிக்­கப்­பட்­டது. படம்: இபிஏ -

சென்னை: நாடு முழு­வ­தும் மகாத்மா காந்­தி­ய­டி­க­ளின் 76வது நினைவு நாள் நேற்று அனு­ச­ரிக்­கப்­பட்­டது. அதன் ஒரு பகு­தி­யாக அனைத்து அரசு அலு­வ­ல­கங்­கள், கல்வி நிலை­யங்­களில் தீண்­டாமை ஒழிப்பு உறு­தி­மொழி எடுத்து வரு­கின்­ற­ன.

இந்­நி­லை­யில், தமிழ் நாட்டின் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் டுவிட்­ட­ரில், "இந்­தி­யச் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யில் ஒற்­றுமை ஏற்­ப­டுத்­திட அமைதி வழி­யில் போரா­டிய அண்­ணல் காந்­தி­ய­டி­கள், ஒரு மத­வெ­றி­ய­னின் வன்­மு­றைக்­குப் பலி­யான இந்­நா­ளில், ஒற்­றுமை மிளி­ரும் சமூ­க­மா­கத் திகழ்ந்திட நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் உறு­தி­யேற்­போம்," என்று பதிவிட்­டுள்­ளார்.