சென்னை: நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், "இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அண்ணல் காந்தியடிகள், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்," என்று பதிவிட்டுள்ளார்.

