பிரான்சில் இருந்து கோவைக்கு மிதிவண்டியில் வந்த பெண்

பிரான்சில் இருந்து கோவைக்கு மிதிவண்டியில் வந்த பெண்

1 mins read
53ec1d4c-86fd-4a2a-a42a-b22d3ff42761
-

சென்னை: 'மண் காப்­போம்' இயக்­கம் குறித்து உலக அள­வில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வய­து மாது நேத்தலி மாஸ், பிரான்ஸ் முதல் இந்­தியா வரை 7,000 கி.மீ. மிதிவண்டி ஓட்டி சாதனை படைத்­துள்­ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தனது சொந்த ஊரான பிரான்­சின் டூலோன் நக­ரில் இருந்து புறப்­பட்ட அவர் இத்­தாலி, ஸ்லோ­வே­னியா, குரோ­வேஷியா, செர்­பியா, பல்­கே­ரியா, துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் மற்­றும் ஓமான் வழி­யாக சைக்­கிள் ஓட்டி, டிசம்பர் மாதம் 1ஆம் தேதி இந்­தி­யா­வுக்கு வந்­தார். பல்­வேறு மாநி­லங்­கள் வழி­யாக நேத்தாலி மாஸ், கோவை ஈஷா யோகா மையத்­துக்கு நேற்று முன்தினம் வந்­தார். இது­கு­றித்து நேத்தாலி மாஸ் கூறும்­போது, "அர­சி­யல் தலை­வர்­கள் 'மண் காப்­போம்' திட்­டத்­துக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து அதற்­கான சட்­டங்­கள் மற்­றும் புத்­து­யிர் அளிக்­கும் நடை­மு­றை­களைச் செயல்­ப­டுத்­த­வேண்­டும்," என்­றார்.