சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் பழைய பெயர்ப் பலகைகளை அகற்றிவிட்டு புதிய தரமான பெயர்ப் பலகைகளை வைக்கும் பணியை சென்னை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.
சென்னையில் 30,000 தெருக்களில் சேதமடைந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு புதிய பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு 8,000 பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டன. புதிய பெயர்ப் பலகைகள் சிங்கார சென்னை 2.0 சின்னத்துடனும் முப்பரிமாண தோற்றத்துடனும் இவை தயாரிக்கப்படுகின்றன.

