நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தாமரைக்குட்டிவிளத் தைச் சேர்ந்தவர் கண்ணன், 39. தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் இவர், 370 கிலோ எடைகொண்ட காரை 25 மீட்டர் தூரம் வரை தூக்கியபடி நடந்துசென்று பார்வையாளர்களை அசரவைத்தார்.
நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சி யைத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்.
உடற்கட்டுப் பயிற்சியாளராக இருந்து வரும் கண்ணன், தனது 90 கிலோ எடையைப்போல் நான்கு மடங்குக்கும் மேலான எடை கொண்ட காரை தூக்கிக் கொண்டு 'யோக் வாக்' முறைப்படி நடந்து சென்றார்.
அப்போது அவரை நண்பர் களும் பொதுமக்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
கண்ணனின் சாதனையை நேரில் பார்வையிட்ட 'சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவன நிர்வாகிகள், அவருக்கு உலகச் சாதனை சான்றிதழ், பதக்கத்தை வழங்கினர்.
பஞ்சாப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடம்பிடித்த கண்ணன், ஏற்கெனவே 13.5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 155 கிலோ கொண்ட ஆடவர் ஒருவர் 435 கிலோ காரை 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

