தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுத் தாக்கல்

தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுத் தாக்கல்

1 mins read
1d8a0f4f-7d62-405c-a87e-9c334e22c05a
-

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் சுயேச்சை வேட்­பா­ளர் பத்­ம­ரா­ஜன் முதல் வேட்­பா­ள­ராக நேற்று வேட்புமனு­வைத் தாக்­கல் செய்­தார். இது­வரை 232 முறையாக இவர் பல்­வேறு தேர்­த­லிலும் போட்­டி­யிட்டு உள்­ளார். தற்­போது 233வது முறை­யாக இடைத்­தேர்­தலில் போட்­டி­யி­டும் இவர், வேட்பு மனுவை தாக்­கல் செய்துள்ளார். இதேபோல், காந்­தி­ய­வாதி ரமேஷ், காந்தி வேடம் அணிந்து வேட்­பு­மனுவைத் தாக்­கல் செய்­தார்.

வேட்பு மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­வ­தற்கு பிப்­ர­வரி 7ஆம் தேதி கடைசி நாள் என்­றும் இதனைத் திரும்­பப் பெற பிப்­ர­வரி 10 கடைசி நாள் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மாா்ச் 2ல் வாக்கு எண்­ணிக்கை நடை­பெற உள்ளது.

மனுத்தாக்கல் செய்ய வந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (இடக்கோடி). காந்தி வேடம் அணிந்து தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்த காந்தியவாதி ரமேஷ். பத்து ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வைப்புத் தொகையான 10,000 ரூபாயை பத்து ரூபாய் காசுகளாகக் கொடுத்து மனுவைத் தாக்கல் செய்தார். படங்கள்: ஊடகம்