'புகைப்பதைத் தடுக்க கடும் சட்டம் தேவை'

'புகைப்பதைத் தடுக்க கடும் சட்டம் தேவை'

1 mins read
053a9ce5-676a-4516-a3bf-50b553a9dc78
பொது இடங்­களில் புகைப்­ப­தற்குத் தடை விதிக்­கும் வகை­யில் சட்­டம் கடு­மை­யாக்கப் பட வேண்டும் என்று பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். படம்: பிக்ஸாபே -

சென்னை: பொது இடங்­களில் புகைப்­ப­தற்குத் தடை விதிக்­கும் வகை­யில் சட்­டம் கடு­மை­யாக்கப் பட வேண்டும் என்று பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்­டர் பதி­வில், "சென்­னை­யில் பள்­ளி­க­ளைச் சுற்­றி­யுள்ள பொது இடங்­களில் புகைப்­பது அதி­க­ரித்­துள்ளது. இதனால், பள்­ளி­க் குழந்­தை­கள் சிக­ரெட் புகையைச் சுவா­சித்து பாதிப்பு­க­ளுக்கு உள்­ளா­வதாக நாளி­தழ் ஒன்று நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ள­து. மலர்­களைவிட மென்­மை­யா­ன­ பள்­ளிக்­கு­ழந்­தை­களுக்கு பிறர் புகைத்து விடும் புகையைச் சுவா­சிப்­பதால் நுரை­யீ­ரல், மார்­ப­கம், புற்­று­நோய், கணை­யம், கருப்­பை­வாய், சிறு­நீர்ப்பை உள்ளிட்ட புற்­று­நோய்கள் ஏற்படுகின்றன. இப்பிரச் சினையில் இருந்து குழந்­தை­க­ளைக் காக்க சட்டம் கடுமையாக்கப்படவேண்­டும்," என்று கூறி­யுள்­ளார்.