சென்னை: சென்னை மாதவரத்தில் கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்குத் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மொத்தமாக 4 லட்சத்து 60,000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கோட்டைசாமி, சென்னை சத்யா நகரைச் சேர்ந்த உதய குமார் ஆகிய இருவரும் 40 கிலோ கஞ்சாவை 50 கிராம் பொட்டலங்களாகத் தயாரித்து இரு மூட்டைகளில் ஆட்டோவில் பதுக்கி வைத்துக்கொண்டு விற்பனை செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டனர்.
கோட்டைசாமி, உதயகுமார் ஆகியோர் கைதான நிலையில், அதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார்.

