எட்டு மாத குழந்தை நீரி­ழிவு நோய் காரணமாக உயிரிழப்பு

எட்டு மாத குழந்தை நீரி­ழிவு நோய் காரணமாக உயிரிழப்பு

1 mins read
5d49e854-52f0-48ff-a41b-e1f52b268713
பால்­ராஜ், கார்த்­திகா தம்­ப­தி­ய­ரின் எட்டு மாதக் குழந்தை மரியா ஆரோ­னிக்கா நீரி­ழிவுநோயால் உயி­ரி­ழந்­தது. படம்: பிக்ஸாபே -

நாகப்­பட்­டி­னம்: நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், வெளிப்­பா­ளை­யத்­தைச் சேர்ந்த பால்­ராஜ், கார்த்­திகா தம்­ப­தி­ய­ரின் எட்டு மாதக் குழந்தை மரியா ஆரோ­னிக்கா நீரி­ழிவுநோயால் உயி­ரி­ழந்­தது.

இது­கு­றித்து நாகை அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­துவ மனை­யின் மருத்­து­வர் கூறு­கை­யில், "மூச்­சுத்­தி­ண­றல் கார­ண­மாக குழந்தை மரியா ஆரோ­னிக்­காவைப் பெற்­றோர் சிகிச்­சைக்­காகக் கொண்டு வந்து சேர்த்­த­னர். பரி­சோ­தனையில் 'டைப்-1' வகை நீரி­ழிவு நோயால் குழந்தை பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரியவந்­தது. குழந்­தைக்கு சர்க்­கரை அள­வா­னது 520 இருந்­துள்­ளது. இது­போல் 4 லட்­சம் குழந்­தை­களில் ஒரு குழந்­தைக்கு வர வாய்ப்­புள்­ளது. ஆறு மாதத்­துக்­குப் பின்­னர் தாய்­ப்பாலை தவிர வேறு உணவு குழந்­தைக்குக் கொடுக்­கும்­போது இதுபோல் நீரிழிவு நோய் வரு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது. மரியாவுக்கு சர்க்­கரை அளவு அதி­க­ரித்­த­தால் மூளை செய­லி­ழந்து உயிரிழந்து விட்டது," எனக் கூறியுள்ளார்.