குடும்பமாக கொள்ளையடித்த கும்பல்; இரு மனைவிகளுடன் கணவருக்கும் காப்பு

கோவை: கோவை­யில் குடும்ப மாகச் சென்று கொள்ளை அடித்து வந்த ஒரு கும்­பலை தனிப்­படை காவ­லர்­கள் கைது செய்து, அவர்­க­ளி­டம் இருந்து 40 பவுன் நகையை மீட்­ட­னர்.

கோவை-உக்­க­டம் லட்­சுமி நர­சிம்­மர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் சந்தேகப்­படும் வித­மாக நடந்துகொண்ட ஐவரிடம் காவ­லர்­கள் விசா­ரித்­த­போது, தாங்­கள் குடும்­ப­மா­கச் சேர்ந்து கொள்ளை அடித்து வந்­ததை ஒப்­புக்­கொண்­ட­னர்.

அவர்­கள் மது­ரை­யைச் சேர்ந்த பார்­வதி, 67, பார்­வ­தி­யின் மகன் கள் கண்­ணையா, 30, திவா­கர், 26, திவா­க­ரின் இரண்டு மனைவி கள் கீதா, 24, முத்­தம்மா, 23, என்­பது தெரி­ய­வந்­தது.

அவர்­களில், கொள்­ளை­யன் திவா­கர் அளித்த வாக்­கு­மூ­லத்­தில் பல்­வேறு திடுக்­கி­டும் தக­வல்­கள் தெரியவந்தன.

“எங்­க­ளது சொந்த ஊர் மதுரை. நாங்­கள் எங்கு சென்­றா­லும் குடும்­பமாகச் சென்­று­தான் திருட்­டில் ஈடு­ப­டு­வோம். முத­லில் நான், என் அம்மா பார்­வதி, தம்பி கண்­ணையா ஆகிய மூவ­ரும் சேர்ந்­துதான் திருட்டுத் தொழி­லில் ஈடு­பட்டு வந்­தோம்.

“அந்தச் சம­யத்­தில் எங்­க­ளது அண்டை வீட்­டுப் பெண்­ணான முத்­தம்­மா­விற்­கும் எனக்­கும் பழக்­கம் ஏற்­பட்­டது. அவ­ர், தனது அக்­கா­வு­டன் சேர்ந்து திருடி வந்­தது தெரி­ய­வந்­தது.

“நாள­டை­வில் முத்­தம்­மா­வை­யும் அவ­ரது அக்­காள் கீதா­வை­யும் சமா­தா­னப்படுத்தி, இரு­வ­ரை­யும் திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தா­கக் கூறினேன். அக்கா- தங்கை உற­வும் விட்­டுப் போகாது, நமது திருட்டுத் தொழிலை மேலும் சிறப்­பாகச் செய்து ஜாலி­யாக, உல்­லா­ச­மாக வாழ­லாம் என்­றேன். அதற்கு இரு­வ­ரும் சம்­ம­தித்ததை அ­டுத்து இரு­வ­ரை­யும் திரு­ம­ணம் செய்­தேன்.

“அவர்­க­ளு­டன் வாழ்­வ­தற்கு மது­ரை­யில் ஓர் ஈரறை வீட்டை வாங்­கி­னேன். அதன்­பின்­னர் மீண்டும் இரு மனைவிகள், தாயார், தம்­பியுடன் திருட்டுத் தொழிலைத் தொடங்­கி­னோம்.

“மாநிலம் முழுவதும் சென்று திருட்­டில் ஈடு­ப­ட்டோம். கூட்­டம் அதி­கமுள்ள பேருந்துகள்தான் எங்களது குறி. மக­ளிர் இல­வசப் பேருந்துகளில் எப்­போ­தும் கூட்­டம் அதி­க­மாக இருக்­கும். எனது இரு மனை­வி­களும் தாயா­ரும் சேர்ந்து பெண்­க­ளின் நகை­களை நைசாக அறுத்து எடுத்­து­வி­டு­வார்­கள். மாதாமாதம் வெவ்வேறு ஊர். இப்படி நகை­களைத் திருடி விற்­கும் பணத்­தில் நட்­சத்­திர ஓட்­ட­லில் அறை எடுத்­துத் தங்­கு­வோம்.

“அங்கு நன்­றாகச் சாப்­பிட்டு, ஜாலி­யாக ஊரை சுற்­றிப்­பார்த்துவிட்டு மதுரை திரும்­வோம். அங்கு சில நாள்­கள் ஓய்வு எடுத்­து­விட்டு மீண்டும் ஒரு ஊரைத் தேர்வு செய்து குடும்­பத்­து­டன் கிளம்­பு­வோம். இவ்­வாறு ஊர் ஊராகச் சென்று நகை­களைத் திருடி உல்­லா­ச­மாக வாழ்க்­கையை வாழ்ந்து வந்­தோம். இப்போது பிடிபட்டுள் ளோம்,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!